பெங்களூரு வழி கோலார்

பெங்களூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற வார இறுதியில் பயணித்திருந்தோம். இருந்த நேரத்தில் நகரில் பார்க்க இடம் தேடி கிடைக்காமல் வீண் செலவுகள் செய்து கழிந்தன. உருப்படியாக சென்ற இடம் HAL அருங்காட்சியகம். உருப்படி என நினைத்து வீண் செலவு செய்த இடங்களும் அடங்கும். HAL அருங்காட்சியகம் நம் நாட்டின் விண்வெளித் துறையின் வளர்ச்சியை விரிவாக காண்பிக்கின்றன. 1910களில் இருந்து பறக்க ஆரம்பித்த சிறிய பெரிய விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. உள்ளே அமர்ந்து செல்லும் போது ஆகாயமும் பறப்பதுவும் … Continue reading பெங்களூரு வழி கோலார்

கன்னியாகுமரி

கர்நாடக பயணம் காவேரி பிரச்சனை காரணமாக கடைசி நிமிடத்தில் ரத்து செய்ய வேண்டி இருந்தது. அதே நாளில் கன்னியாகுமரி செல்லலாம் என்ன திட்டம் உருவானது. சென்னையில் இருந்து மதுரை, அங்கிருந்து கன்னியாகுமரி. கன்னியாகுமரி செல்லும் வழியில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நிறுத்தினோம். கூட்டம் அலைமோதியது. கோவிலுக்கு செல்லும் நோக்கம் மாறிக் கொண்டே வருகிறது. சிறுவயதில் கடவுள் கல்லுக்குள் இருப்பதாக நினைத்து வணங்கியது, இன்று அதே கோவிலில் மனிதனின் கடவுளை பார்க்கவே செல்கிறோம். அவனுடைய முயற்சி, கனவு, அதைத்தாண்டிய … Continue reading கன்னியாகுமரி

சக்லேஷ்பூர்

பெங்களூரில் இருந்து சலித்து கொண்டு தயாரான பயணம். பயணத்தின் ஏற்பாடு வேலைகளும், உடல் நல குறைவுக்காக உட்கொள்ளும் கஷாயமும், இடமாற்றமும் இந்த பயணத்தை நிறுத்த எத்தனித்தது. அதை முறியடித்து கிளம்பினோம். இதெல்லாம் பயண நாளின் முன்பு வரைதான். பொழுது விடிந்த உடன் அணைத்து தயக்கங்களும் பறந்து போகும். அதிகாலையில் பெங்களூரில் இருந்து மங்களூர் செல்லும் ரயிலில் ஏறினோம். நான்கு மணி நேரத்தில் சக்லேஷ்பூர் வந்தடைந்தோம். சக்லேஷ்பூர் மலையின் தொடக்கத்தில் அமைந்துள்ளது, மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. … Continue reading சக்லேஷ்பூர்

பரம்பிக்குளம்

காடும் மலையும் புலியும் நாங்கள் செல்லும் ஊருக்கு அருகில் இருந்தால் உடனே பயணத்துக்குள் வந்து விடும். புலி இருக்க தேவை இல்லை. புலி என்ற பெயர் இருந்தால் கூட போதும். அங்கு செல்ல எல்லா மெனக்கெடல்களும் நடந்தேறி விடும். அப்படிதான் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் சென்றோம். பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு ஆனைமலை வழியாக டாப் ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம் சென்றோம். இரண்டு கிமீ வித்தியாசத்தில் டாப் ஸ்லிப் தமிழ் நாட்டிலும், பரம்பிக்குளம் கேரளத்திலும் உள்ளது. மலையில் ஏறும் … Continue reading பரம்பிக்குளம்

பாலக்காடு

கோடை விடுமுறையில் ஒரு சிறு பயணமாக பாலக்காடு சென்று இருந்தோம். கோவையில் இருந்து ஒரு மணி நேரத்துக்குள் வந்து சேர்ந்ததுனாலும், உணவு மொழி வெயில் என எதுவும் மாற்றமில்லாமல் இருந்ததுனாலும் கேரளத்தில் இருந்த உணர்வு இல்லை. ஒரு புகழ் பெற்ற ஜூஸ் (Sindhu Cool Bar) கடைதான் முதலில் சென்றது. கடையின் அலங்காரம் வெகுவாக கவர்ந்தது. சுவர் முழுதும் அனைத்து தெய்வங்களும் புகைப்படமாகவும் சிற்பங்களாகவும் இருந்தனர். சிவன் விஷ்ணு புத்தர் முதல் ராமகிருஷ்ணர் விவேகானந்தர் வரை. கூடவே … Continue reading பாலக்காடு

ஜெய்ப்பூர்

ரண்தம்போரில் இருந்து ஜெய்ப்பூர் ரயிலில் பயணித்தோம். அது மும்பையில் இருந்து ஹரியானா செல்லும் தொலைதூர வண்டி. எங்கள் பெட்டியில் ஒரு மும்பை குடும்பம் இரு குழந்தைகளுடனும், ராஜஸ்தான் தந்தை மகளும் பயணித்தனர். கூடவே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெரியவரும் உடன் பயணித்தார். பொதுவான மொழி பேசாத போதும் பேச்சு வார்த்தை சுவாரஸ்யமாக போனது. ராஜஸ்தான் தந்தை கம்பீரமாக கோட் அணிந்து துளியும் தயக்கமில்லாமல் அவரது மொழியில் பேசினார். அதுவே அதிகம் புரிய வைத்தது. மாநிலத்தில் இரண்டு இடங்களில் … Continue reading ஜெய்ப்பூர்

ரண்தம்போர் தேசிய பூங்கா

பரத்பூரில் ராஜஸ்தானின் எல்லையில் உள்ள ஊர். ஆக்ராவில் இருந்து 50 கீ.மீ தூரம். அங்கிருந்து ரயிலில் சவாய் மாதோபூர் வந்து சேர்ந்தோம். இரண்டு மணிநேர பயணம். வழி நெடுக கடுகு வயல்களே நிறைந்திருந்தன. தாளிப்பை தவிர வேறெங்கும் கடுகு பயன்படுத்திராத நம்மக்கு, இவ்வளவு என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. ராஜஸ்தான் தான் கடுகு உற்பத்தியில் முதலிடம் என்பதில் ஆச்சர்யம் இல்லை. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புலியின் படங்கள் நம்மை வரவேற்கின்றன. சுற்றுலா பயணிகள் எங்கும். ரண்தம்போர் … Continue reading ரண்தம்போர் தேசிய பூங்கா

ஆக்ராவில் ஒரு நாள்

ஒரு வார பயணமாக ஆக்ரா, ரண்தம்போர், ஜெய்ப்பூர் சென்றிருந்தோம். இதுவே வட இந்தியாவிற்கு முதல் பயணம். டெல்லி சென்று அங்கிருந்து ரயிலில் ஆக்ரா செல்வதாக திட்டம். ஜனதிரள்களுக்கு நடுவில் ஊடுருவி ரயிலில் வந்தமர்ந்தோம். தொலை தூரப்பயணம் செல்வதற்கு முன்னுள்ள ஒரு வித எதிர்பார்ப்பு கலந்த பதட்டம் வீட்டை விட்டு கிளம்பியதும் காணாமல் போய் விடுகிறது. வடஇந்திய பிம்பமும் அப்படித்தான். ரயில் ஏறியதும், மொழி தெறியாத போதும் அகன்று விடுகிறது. ரயில் கிளம்பியதும் சிறிது தூரம் போனால் பசுமை … Continue reading ஆக்ராவில் ஒரு நாள்