புதுமைப்பித்தன்

மூன்று மாதங்கள் இருக்கும் புதுமைப்பித்தன் கதைகளை படிக்க தொடங்கி. கதைகளில் கிண்டலும் கேலியும் தாண்டி அவரது எண்ணங்கள் மேலே வந்து கொண்டே இருக்கிறது. போகிற போக்கில் சொல்லி விட்டு போகிறார். நாம் கிடந்தது உழல வேண்டி உள்ளது. கடவுளும் கந்தசாமி பிள்ளையும், வேதாளம் சொன்ன கதை, செல்லம்மாள் என பத்துக்கும் மேற்பட்ட கதைகளை படித்த பிறகு ஆசிரியரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என தோன்றியது. யார்தான் இந்த ஆள். இவரை பற்றி இவரது நண்பர் ரகுநாதன் … Continue reading புதுமைப்பித்தன்

வில்

குழந்தைகள் - கலீல் ஜிப்ரான் மகளுக்கு எட்டு வயதாக போகிறது. கலீல் ஜிப்ரானின் கவிதை படித்து பல வருடங்கள் இருக்கும். ஆனால் இந்த வருடத்தில்தான் பல முறை ஞாபகம் வருகிறது. மகள் வளர்கிறாள், முழுவதுமாய் அணைப்பில் இருந்து சிறிது சிறிதாக வெளியே செல்வது தெரிகிறது. சில இடங்களில் அருகில் நின்றும், சில இடங்களில் எதிரே நின்றும், தெளிவாக தோள்கொடுத்தும் பேசுகிறாள். சில நாட்களுக்கு முன் நாங்கள் இருவரும் கடைக்கு செல்லும் வழியில் நடந்த உரையாடல். நான் அதற்கு … Continue reading வில்

குழந்தைகள்

கலீல் ஜிப்ரானின் "குழந்தைகள்" ஆங்கிலத்தில் படித்து, அதன் மொழியாக்கம் நிறைவளிக்காமல் நானே மொழிபெயர்க்க முயன்றது. On Children - Kahlil Gibran உன் குழந்தைகள் உனது குழந்தைகளே அல்ல. தன்னை தானே பெருக்கிக் கொள்ள தவிக்கும் உயிர் சக்தியின் மகன்களும் மகள்களுமே அவர்கள். அவர்கள் உன்வழியே வந்தவர்களே ஒழிய உன்னால் வந்தவர்கள் கிடையாது,உன்னோடு இருப்பதால் அவர்கள் உனது சொத்து என்றில்லை. அவர்களுக்கு உனது அன்பை புகட்டலாம்; சிந்தனைகளை அல்ல,அவர்களுக்கென்றே சிந்தனைகள் உண்டு. அவர்களது உடலுக்கு நீ அடைக்கலம் … Continue reading குழந்தைகள்

Coffee!

ஆங்கிலத்தில் அழகாக சொல்ல முடிவது தமிழில் எழுத முடியவில்லை. அதனால் coffeeயை coffee என்றே சொல்லலாம். சிறு வயது முதல் குடித்துதான் என்றாலும் முதலில் அதை ஒரு பொருட்டாக மதித்து அருந்தியது அமெரிக்காவில் தான். பதினைந்து வருடங்களுக்கு முன்பு அங்கிருந்த போது, அலுவலக நண்பர்கள் அறிமுகப்படுத்தியது. ஸ்டார் பக்ஸ்க்குள் சென்றால் சுண்டி இழுக்கும் மணம். கால் லிட்டர் கோப்பை வழிய கருப்பு காபியை வாங்கி அதில் சிறிதளவு பால் விட்டு, சர்க்கரை சேர்த்து குடித்தது. காலை மாலை … Continue reading Coffee!

தேடல்!

எதை தேடுகிறேன் என்று தெரியாமல் தேடுவதுதெரிந்து விட்டால் தேடல் காணாமல் போய்விடும் அல்லவா! ஏன் தேடுகிறேன் என்று சளித்துக் கொண்டதுண்டுசுற்றம் கற்று கொடுத்த விடைகள் போதியதில்லைஇவ்வளவுதான் என்று ஏற்கவும் முடிவதில்லை உலகியல் ஆசைகள் முன் செல்ல முடிவதில்லைபுத்தகங்கள் பயணங்கள் திசையை மாற்றி அமைக்க முடிகிறதே தவிரதீயை அடக்கவோ அமைதி படுத்தவோ முடிவதில்லை காற்றில் ஆடி ஆடி சென்று கொண்டிருக்கிறேன் போகும் வழி என்னவோ மகிழ்வாகத்தான் இருக்கிறதுபோய் கொண்டிருக்கிறோம் என்பதே மகிழ்ச்சி தானே! போகும் வழியில் கடக்கும் நண்பர்களும் … Continue reading தேடல்!

ஏன் புராணங்கள் ?

Joseph Campbell (The Power of Myth) - இந்த தொடர் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. புராணங்களின் மேல் இருந்த பார்வையை மாற்றி அமைக்கிறது. புராணங்களில் நமக்கு என்ன இருக்கிறது என்று பார்க்க தூண்டுகிறது. இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்கள் முன்னர், ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத பழங்குடிகளின் கதைகள் ஒன்று போல் இருக்கின்றன. தெய்வப்பிறவியின் புனிதமான பிறப்பு, இறப்பு, பின்பு உயிர்த்தெழுதல் என்பது அனைத்து பண்பாட்டிலும் உள்ளது. பிரதான உணவாக மனிதனுக்கு அன்று இருந்த விலங்குகள். … Continue reading ஏன் புராணங்கள் ?

கற்றலும் தன்னை உணர்தலும்

சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் கட்டுரை  பற்றிய ஒரு பதிவை படித்தவுடன் தோன்றியது. என்ன பெறுகிறோம் கற்பதில் இருந்து. கற்றல் பல தளங்களில் நிகழலாம். இயற்கை, வரலாறு, இலக்கியம், அறிவியல், தத்துவம் இப்படி எதில் வேண்டுமானாலும். என்ன பெறுகிறோம் இவற்றில் இருந்து. நாம் செய்யும் பணிக்கு சம்பந்தம் இல்லாத போது? அறிதலின் இன்பம் ? ஓநாய் குலச்சின்னம் புத்தகத்தை படித்த நாட்களும் சரி, அதற்கு பின் வந்த நாட்களும் சரி ஓர் பேருவகையை கொடுத்தது. சமீபத்தில் சென்ற ஓர் … Continue reading கற்றலும் தன்னை உணர்தலும்

நிற்க!

சில சமயங்களில் ஏதாவது ஒன்று நம்மை நிறுத்தி வைக்க பார்க்கிறது. நம் எண்ண ஓட்டத்தை, தினசரி ஓடிக்கொண்டிருக்கும் துடிப்பை, படித்துக்கொண்டிருக்கும் விஷயங்களை, வேலையை, உணவை. இப்படி எல்லா விஷயங்களையும் நின்று யோசிக்க வைக்கும். போய்க்கொண்டிருக்கும் பாதையை கேள்வி எழுப்பும். மாற்று கருத்துக்களை உள்புகுத்தும். பல புதிய பாதைகளை காட்டி தள்ளப்பார்க்கும். என்றோ கிடப்பில் போட்ட விஷயங்களை தேவையானது போல் கொண்டு வரும். நேற்று வரை தீர்மானமாய் இருந்த கருத்துக்களை தடுமாற்றம் கொள்ள செய்யும். வருங்காலத்தை மாற்றி யோசிக்க … Continue reading நிற்க!

மழைக்காலம்!

ஒவ்வொரு வருடமும் நினைவுகளை விட்டு செல்லாமல் போவதில்லை. டிசம்பர் முதல் பாதி ஏதாவது வரும். இப்படித்தான் நம்பிக்கைகள் உருவாவதோ! கடந்த 6 அல்லது 7 வருடங்களாக பருவ மழையோ அல்லது ஏதாவது ஓர் பெரிய நிகழ்வோ நகரத்தை உலுக்கி விட்டுத்தான் போகிறது. கொரோனாவிற்கு பின் இதுவே வீடடங்க வேண்டிய நாட்கள். நகரத்தை அமைதி ஆக்கி இருட்டாக்கி, வெளியே இருட்டுதான் உள்ளே பார் என்று நினைவுறுத்தும். ஓட்டம் குறைய, உணவை குறைக்காமல் போகும் போது கேள்வியை எழுப்பும். பிற … Continue reading மழைக்காலம்!