தேடல்!

எதை தேடுகிறேன் என்று தெரியாமல் தேடுவது
தெரிந்து விட்டால் தேடல் காணாமல் போய்விடும் அல்லவா!

ஏன் தேடுகிறேன் என்று சளித்துக் கொண்டதுண்டு
சுற்றம் கற்று கொடுத்த விடைகள் போதியதில்லை
இவ்வளவுதான் என்று ஏற்கவும் முடிவதில்லை

உலகியல் ஆசைகள் முன் செல்ல முடிவதில்லை
புத்தகங்கள் பயணங்கள் திசையை மாற்றி அமைக்க முடிகிறதே தவிர
தீயை அடக்கவோ அமைதி படுத்தவோ முடிவதில்லை

காற்றில் ஆடி ஆடி சென்று கொண்டிருக்கிறேன்

போகும் வழி என்னவோ மகிழ்வாகத்தான் இருக்கிறது
போய் கொண்டிருக்கிறோம் என்பதே மகிழ்ச்சி தானே!

போகும் வழியில் கடக்கும் நண்பர்களும் ஆசிரியர்களும்
இந்த பயணம் சரியென்றே எண்ண வைக்கிறார்கள்

ஏன் இடங்கள் கூட சொல்கின்றன
எல்லை என்பது பார்ப்பவரை பொறுத்தது என்று

தாண்டிச் செல்வதும் நின்று விடுவதும் ?

நின்றால் மக்கச் செய்ய பல்லாயிர கணக்கான கிருமிகள்
காத்துக் கிடக்கிறது

ஆயிரம் அணுக்கள் நிறுத்தி வைக்க முயலும் போது
எங்கோ ஒரு மூலையில் இருந்து வெளிவர குரல் கொடுக்கும்
அந்த அணுவை

அந்த குரலை

அந்த உள்ளுணர்வை

செவிமடுக்காமல் செல்ல என்ன உரிமை இருக்கிறது ?

Leave a comment