The Bite of the Mango – புத்தகம்

நமக்கிருக்கும் கவலைகள் ஏராளம். பிரச்சனைக்களும் தான். வீட்டில் தொடங்கி, அலுவலகம், சொந்தம், உடல்நிலை என பட்டியல் போடலாம். அப்படி ஏதாவது பிரச்சனையில் இருக்கும் போது, அதை விட பெரிய பிரச்சனை ஒன்று நிகழும் போது, சின்னதை விட்டு பெரியதை பிடித்துக்கொள்வோம். சிறிதோ பெரிதோ, முட்டி நிற்கும் சூழ்நிலை வரும் போது படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று. நம் மனதில் நன்றி உணர்வை உருவாக்கும். பிரச்சனைகளால் நின்று இருந்த நல்ல விஷயங்களை துவங்கச் செய்யும். நம் பிரச்சனைகள் நிஜமாகவே … Continue reading The Bite of the Mango – புத்தகம்

கற்றலும் தன்னை உணர்தலும்

சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் கட்டுரை  பற்றிய ஒரு பதிவை படித்தவுடன் தோன்றியது. என்ன பெறுகிறோம் கற்பதில் இருந்து. கற்றல் பல தளங்களில் நிகழலாம். இயற்கை, வரலாறு, இலக்கியம், அறிவியல், தத்துவம் இப்படி எதில் வேண்டுமானாலும். என்ன பெறுகிறோம் இவற்றில் இருந்து. நாம் செய்யும் பணிக்கு சம்பந்தம் இல்லாத போது? அறிதலின் இன்பம் ? ஓநாய் குலச்சின்னம் புத்தகத்தை படித்த நாட்களும் சரி, அதற்கு பின் வந்த நாட்களும் சரி ஓர் பேருவகையை கொடுத்தது. சமீபத்தில் சென்ற ஓர் … Continue reading கற்றலும் தன்னை உணர்தலும்

Roots – புத்தகம்

அலெக்ஸ் ஹேலியின் Roots (Alex Haley) 1976ல் வெளியிடப்பட்டது. அலெக்ஸ் ஹேலியின் 12 வருட உழைப்பில் உருவான புத்தகம். தனது வேர்களை தேடிச்சென்று கதையாய் சித்தரித்தது. 1977யில் Roots டிவி தொடராகவும் வந்தது. 1750 களில் காம்பியாவில் உள்ள ஒரு சிறு பழங்குடி கிராமத்தில் துவங்குகிறது கதை. அங்கிருந்து கடத்தப்பட்டு அமெரிக்காவில் அடிமையாக்க படுகிறான் கதையின் நாயகன் Kunta Kinte, அலெக்ஸ் ஹேலியின் மூதாதையர். அங்கிருந்து தொடங்குகிறது அடிமை வாழ்க்கை. அன்றிலிருந்து 1970களில் அலெக்ஸ் வரை என்ற … Continue reading Roots – புத்தகம்

சக்லேஷ்பூர்

பெங்களூரில் இருந்து சலித்து கொண்டு தயாரான பயணம். பயணத்தின் ஏற்பாடு வேலைகளும், உடல் நல குறைவுக்காக உட்கொள்ளும் கஷாயமும், இடமாற்றமும் இந்த பயணத்தை நிறுத்த எத்தனித்தது. அதை முறியடித்து கிளம்பினோம். இதெல்லாம் பயண நாளின் முன்பு வரைதான். பொழுது விடிந்த உடன் அணைத்து தயக்கங்களும் பறந்து போகும். அதிகாலையில் பெங்களூரில் இருந்து மங்களூர் செல்லும் ரயிலில் ஏறினோம். நான்கு மணி நேரத்தில் சக்லேஷ்பூர் வந்தடைந்தோம். சக்லேஷ்பூர் மலையின் தொடக்கத்தில் அமைந்துள்ளது, மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. … Continue reading சக்லேஷ்பூர்

பரம்பிக்குளம்

காடும் மலையும் புலியும் நாங்கள் செல்லும் ஊருக்கு அருகில் இருந்தால் உடனே பயணத்துக்குள் வந்து விடும். புலி இருக்க தேவை இல்லை. புலி என்ற பெயர் இருந்தால் கூட போதும். அங்கு செல்ல எல்லா மெனக்கெடல்களும் நடந்தேறி விடும். அப்படிதான் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் சென்றோம். பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு ஆனைமலை வழியாக டாப் ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம் சென்றோம். இரண்டு கிமீ வித்தியாசத்தில் டாப் ஸ்லிப் தமிழ் நாட்டிலும், பரம்பிக்குளம் கேரளத்திலும் உள்ளது. மலையில் ஏறும் … Continue reading பரம்பிக்குளம்

பாலக்காடு

கோடை விடுமுறையில் ஒரு சிறு பயணமாக பாலக்காடு சென்று இருந்தோம். கோவையில் இருந்து ஒரு மணி நேரத்துக்குள் வந்து சேர்ந்ததுனாலும், உணவு மொழி வெயில் என எதுவும் மாற்றமில்லாமல் இருந்ததுனாலும் கேரளத்தில் இருந்த உணர்வு இல்லை. ஒரு புகழ் பெற்ற ஜூஸ் (Sindhu Cool Bar) கடைதான் முதலில் சென்றது. கடையின் அலங்காரம் வெகுவாக கவர்ந்தது. சுவர் முழுதும் அனைத்து தெய்வங்களும் புகைப்படமாகவும் சிற்பங்களாகவும் இருந்தனர். சிவன் விஷ்ணு புத்தர் முதல் ராமகிருஷ்ணர் விவேகானந்தர் வரை. கூடவே … Continue reading பாலக்காடு

Sophie’s World – புத்தகம்

தத்துவத்தை பற்றிய அறிமுக புத்தகங்களை தேடும் போது எதேச்சையாக கண்ணில் பட்ட புத்தகம், இந்த 'Sophie 's world'. ஜோஸ்டீன் கார்டர் குழந்தைகளுக்காக எழுதிய புத்தகம் (15+ ஆவது இருக்க வேண்டும்). வாழ்க்கையின் முக்கியமான தத்துவ கேள்விகளை அறிமுகம் செய்து, அதை கடந்த 2500 வருடங்களாக இக்கேள்விகளை ஆராய்ந்த ஐரோப்பிய தத்துவ ஞானிகளையும் கருத்துக்களையும் அறிமுகம் செய்கிறது. "He who cannot draw on three thousand years is living from hand to mouth" … Continue reading Sophie’s World – புத்தகம்

சித்தார்த்தா – புத்தகம்

ஹெர்மன் ஹெஸ்ஸே நூறு வருடங்களுக்கு முன்பு எழுதியது. அறிமுகம் தேவை இல்லாத புத்தகம். படிக்கும் முன் ஆசிரியரை பற்றி அறியும் ஆவல். இது ஒரு வித சந்தேக புத்தியோ என்று கூட தோன்றுகிறது. தராசிட என்னக்கு என்ன தெரியும் என்றும் தோன்றும். இருந்தும் பார்த்ததில், ஹெஸ்ஸேவின் வாழ்வும் தேடலும் பல இடங்களுக்கும் பல கோணங்களுக்கும் சென்றுள்ளது. பௌத்தம், இந்திய அறிமுகம் அதில் ஒரு சில வருடங்கள். தேடலை பிரதானமாக கொண்ட கதை. புத்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த … Continue reading சித்தார்த்தா – புத்தகம்

நிற்க!

சில சமயங்களில் ஏதாவது ஒன்று நம்மை நிறுத்தி வைக்க பார்க்கிறது. நம் எண்ண ஓட்டத்தை, தினசரி ஓடிக்கொண்டிருக்கும் துடிப்பை, படித்துக்கொண்டிருக்கும் விஷயங்களை, வேலையை, உணவை. இப்படி எல்லா விஷயங்களையும் நின்று யோசிக்க வைக்கும். போய்க்கொண்டிருக்கும் பாதையை கேள்வி எழுப்பும். மாற்று கருத்துக்களை உள்புகுத்தும். பல புதிய பாதைகளை காட்டி தள்ளப்பார்க்கும். என்றோ கிடப்பில் போட்ட விஷயங்களை தேவையானது போல் கொண்டு வரும். நேற்று வரை தீர்மானமாய் இருந்த கருத்துக்களை தடுமாற்றம் கொள்ள செய்யும். வருங்காலத்தை மாற்றி யோசிக்க … Continue reading நிற்க!